search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "களவாணி மாப்பிள்ளை"

    தினேஷ், அதிதி மேனன், தேவயானி, ஆனந்த் ராஜ் நடிப்பில் காந்தி மணிவாசகம் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் விமர்சனம். #KalavaniMappillai
    மிகவும் செல்வந்தர் தேவயானி. இவருக்கு பொய் சொன்னால் பிடிக்காது. இவரது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது கணவர் ஆனந்த் ராஜ்க்கு கார் ஓட்ட தெரியாத காரணத்தால் அப்பா இறந்து போகிறார். கார் ஓட்ட தெரியாது என்று தன்னிடம் மறைத்ததால் ஆனந்த் ராஜை ஒதுக்கி வைக்கிறார்.

    தேவயானியின் ஒரே மகள் நாயகி அதிதி மேனன். இவர் கால்நடை உதவி மருத்துவராக இருக்கிறார். இவருக்கும் நாயகன் தினேஷுக்கும் ஒரு விபத்தில் பழக்கம் ஏற்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. தினேஷுக்கு 18 வருடங்களுக்கு எந்த வண்டியும் ஓட்டக்கூடாது என்று ஜோதிடர் ஒருவர் சொல்ல, எந்த வண்டியும் ஓட்ட பழகாமல் வளர்ந்திருக்கிறார்.

    தினேஷ், அதிதிமேனனின் காதல் விஷயம் தேவயானிக்கு தெரிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறார்கள். கார் ஓட்ட தெரியாத காரணத்தால் கணவரை ஒதுக்கி வைத்திருக்கும் தேவயானிக்கு, தினேஷின் விஷயம் தெரிந்ததா? நாயகி அதிதி மேனனை தினேஷ் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.



    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் தினேஷ் இப்படத்தின் நாயகனாக நடித்திருக்கிறார். காமெடியில் ஓரளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக இப்படத்தில் நடனம் சிறப்பாக ஆடியிருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் அதிதி மேனன் அழகாக இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

    மாமியாராக நடித்திருக்கும் தேவயானி, தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு கணவராக நடித்திருக்கும் ஆனந்த் ராஜுக்கும் இடையேயான காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

    முனிஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.



    காமெடியை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் காந்தி மணிவாசகம். ஆனால் ஓரளவிற்கே காமெடி கைகொடுத்திருக்கிறது. சுவாரஸ்யமான காட்சிகள், வித்தியாசமான காட்சிகள் வைத்திருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

    ரகுநந்தன் இசையில் முதல் பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

    மொத்தத்தில் ‘களவாணி மாப்பிள்ளை’ காமெடிகாரன்.
    விஜய்யின் சர்கார், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் உள்ளிட்ட 6 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில படங்களின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan
    இந்த ஆண்டு தீபாவளிக்கு அஜித், விஜய், சூர்யாவின் படங்கள் ரிலீசாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தாமதமானதால் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. 

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியிருக்கும் நிலையில், படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா, விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படங்களும் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



    ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், அட்டகத்தி தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படமும் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமீர் கான் - அமித்தாப் பச்சன் இணைந்து நடித்துள்ள தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான் படமும் தீபாவளி ரேசில் இணைந்துள்ளது.



    3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருந்த தமிழ்நாட்டில் இப்போது 1000 திரையரங்குகள் கூட இல்லை. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய படங்கள் வெளியானால் சிக்கல் ஏற்படுகிறது. ஆறு படங்கள் ஒரே நேரத்தில் வெளியாக வாய்ப்பு இல்லை. எனவே திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய படங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது. #Sarkar #ThimiruPudichavan

    பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த தேவயானி தற்போது மாமியாராக மாறி இருக்கிறார். #KalavaniMappillai #Devayani
    அம்மா வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த தேவயானி ஒரு படத்தில் தினேசுக்கு மாமியாராக நடிக்கிறார். மூத்த இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.

    கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஜோதி, லல்லு, கிரேன் மனோகர், நாஞ்சில் விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

    இயக்குனர் காந்தி மாணிக்கவாசம் கூறுகையில்,

    ‘என் அப்பா மணிவாசகம் மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல், நிறைய காமெடி வைத்திருப்பார். அதன்படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். மாமியார் மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித்தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.



    தினேஷுக்கு மாமியாராக நடிக்க வேண்டும் என்று தேவயானியிடம் கேட்ட போது தயங்கினார். முழு கதையையும் கேட்ட உடன் ஓ.கே.சொன்னார் என்றார்.
    ×